To view the slide show, On your speaker & click

நிலு 2 வயதாக இருக்கும் போது அவளின் சொற்கள்,
என் அகராதியில் இருந்து....


ஆ ஈஈஸிக்கா Ah iishika - Ah! Beautiful
இங்கிமஸ் தி Ingimas thee - Christmas tree
மிக் mik - Milk
ஷெப் shép - Sleep
ஷெகுஷா? - C'est quoi ? (அது என்ன?
in French)
காஸிருக்கா? - காசு இருக்கா? (have money)

Photobucket
Another guess........
There is only one itme is real in these pictures, find it out...
IF YOU CAN!



Photos

clickable

Are you good in counting???
How many Tyssys, How many Mikees, How many Nilous, How many Michelles and How many Jaydiis are at the Kitty park???


Photos are clickable










ஸொப்ளான் என்டால், முதல்வன் படதில் வரும் சொப்லான் இல்லை... இது நேர் எதிர் மாறு, படு decent - decent என்றால் அப்பிடி ஒரு decent. கீல வடன் னே.
law சட்டம் பேசி திரியுர பல பேர் மத்தியில், நம்ம ஸொப்ளான் campus pass பண்ணிய வித்தைகார விருமாண்டி.

"எப்போவாவது party என்றால் தண்ணி அடிப்பது.." என்பது இவரோட opening approach. Mobile ல அன்பர்களுக்கு ஆராச்சி மணி கட்டுவார். அதென்ன ஸொப்ளான் face இல் அப்பிடி ஒரு ரேகை ஓடுது?
சூரியன் படுக்க போனால், "அந்தி வரும் நேரம்.....முந்தி வரும் ராகம்..." என்று music director range ல, 500 watts பல்ப் எரியும். "எங்க" எண்டு சில பேர் welcome வெத்திலை வைப்பினம்.
ஆர்வ்வத்தை காட்டாமல் மையமாய் mouse ஐ அப்பிடியும் இப்பிடியும் ஆட்டி, enter இல் ஒரு தட்டு தட்டி close பண்னுவார் அன்றய நாளை alcohol மைனர்.
"என்ன BL தானே" என்று கேட்டால், என்னமோ முன்ன பின்ன அந்த சொல்லை கேக்காத மாதிரி தலை ஆட்டுவார் தலைவர். பங்காளி dimple விழ சிரிச்சாலும் அதே reaction தான்.


மூண்று shot வரை மேஸை, கதிரை, நாட்டாமை கணக்கு ம்ம்ம் கொட்டுவார். அப்பிடியே கண் sharp ஆகி கால் நட்டு பிடிக்க திமு திமு என scene மாறுவார். எல்லாருக்கும் repeat எண்டு தானே serving தொடங்கினால், நாட்டாமை ஒரு forme கு வந்து விட்டார் என்று அர்த்தம்.
"மச்சான் அது என்ன பாட்டடா..." என்டு தொடங்கினால் feeling drums அதிர தொடங்கும். தன்ர heart இன் அத்தனை room யும் துறந்து காட்டி repeat, repeat ஆய் ஏத்தி, போத்தல் முடிந்தால் தான் சாப்பாடு ready ஆகும் என்ற கோட்பாடு.

ஆனால் ஸொப்ளான் யாரும் சிக்காமல் தனிய வீட்டில் இருந்தால் தான் வரும் சிக்கல். மூண்றாவது shot மூர்க்கத்திலோ அல்லது ஏழாவது empty can ஏகாந்தத்திலோ mobile லை "ஸுட்"டினால் சிக்குவான்கள் சிங்க குட்டிகள். அப்ப சிதறும் பல ரகஸியங்கள். "mid-night ஸொப்ளான்" என்ற பேர் கூட வைக்கலாம். மப்பு ஏற ஏற பப்பு phone லயே orchestra நடத்துறதில் he is the boss.

சில நேரம் mobile ring பண்ண இல்லை என்றால் charger இல் போட்டு விடுவார், அப்பிடியும் வர இல்லை என்டால் "market போய்ட்டுதோ" என்டு எல்லாம் கவலை படுவார் நம்ம ஸொப்ளான்.

இந்த repeat ஸாகசத்தால் trafic police ஐ ஊதியே கொல்லுறது, over speed up பண்னுறது என்டு points ஐ இழக்கிறது, பிறகு re-appeal பண்னுறது எல்லாம் ஸொப்ளானின் repeating life style.

ஏன் தான் இப்படி பண்னுறாயடா என்டு கேட்டால்,

கில்லாடிக்கு பதில் வரும் சட்டென்று............

" எல்லாம் உங்களால தான்.."


Photo Sharing and Video Hosting at Photobucket

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளில் அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை,

பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்,

பால்போல் சிரிப்பதில் பிள்ளை
பனிபோல் அணைப்பதில் கள்ளி
வார்தைகளிலே அவள் கில்லி - நிலு
கவிஞன் ஆக்கினாள் என்னைPhoto Sharing and Video Hosting at Photobucket

வெகு விரைவில்......
வெகு விரைவில்
விலங்குகளிடம் காணப்படும் இனப்பெருக்கத் தேவைக்கான பாலுறவு என்னும் உயிரியற் செயற்பாடு தொடர்பான பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகச் சமூக விலங்கான மனிதன் கண்டுபிடித்த நிறுவன அமைப்பே திருமணம் ஆகும்.
திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
நெறிமுறை (norm) என்பது சமுதாயத்தில் மனிதர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும்.
இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை "விழுமியம்" போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது.
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குறிப்பிட்ட விடயங்களில் மக்கள் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற நெறிப்படுத்தல் தன்மை கொண்டது. நெறிமுறைகளின் தாக்கம் பல்வேறு வகையான மனித நடத்தைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
'''திருமண வகைகள்'''அடிப்படையில் திருமணம் ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே ஏற்படுகின்ற ஒரு தொடர்பைக் குறிப்பதாகும்.

1)ஒருதுணை மணம் (monogamy)
ஒருதுணை மணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதைக் குறிப்பதுடன் எந்தவொரு நேரத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டிருக்க முடியும் என்பதையும் குறிக்கும்.

2)பலதுணை மணம் (polygamy)
ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம்.

3)குழு மணம் (group marriage)
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அதுபோல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கணவனாகவும் ஆகிறார்கள்.


'யாழ்'னி
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம், போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும்.அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."கணவன் - மனைவி தொடர்பு, பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையைலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.
குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,
1. மணவழிக் குடும்பம் (Conjugal Family)
2. தனிக் குடும்பம் (Nuclear family)
3. விரிந்த குடும்பம் (Extended Family) என வகைப்படுத்தலாம்.

1)ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும்.

2)கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.
3)கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.

யாழ்'னி