குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம், போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும்.அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."கணவன் - மனைவி தொடர்பு, பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையைலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.
குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,
1. மணவழிக் குடும்பம் (Conjugal Family)
2. தனிக் குடும்பம் (Nuclear family)
3. விரிந்த குடும்பம் (Extended Family) என வகைப்படுத்தலாம்.
1)ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும்.
2)கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.
3)கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.
யாழ்'னி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment