வெகு விரைவில்......
வெகு விரைவில்
விலங்குகளிடம் காணப்படும் இனப்பெருக்கத் தேவைக்கான பாலுறவு என்னும் உயிரியற் செயற்பாடு தொடர்பான பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகச் சமூக விலங்கான மனிதன் கண்டுபிடித்த நிறுவன அமைப்பே திருமணம் ஆகும்.
திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
நெறிமுறை (norm) என்பது சமுதாயத்தில் மனிதர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும்.
இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை "விழுமியம்" போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது.
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குறிப்பிட்ட விடயங்களில் மக்கள் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற நெறிப்படுத்தல் தன்மை கொண்டது. நெறிமுறைகளின் தாக்கம் பல்வேறு வகையான மனித நடத்தைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
'''திருமண வகைகள்'''அடிப்படையில் திருமணம் ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே ஏற்படுகின்ற ஒரு தொடர்பைக் குறிப்பதாகும்.

1)ஒருதுணை மணம் (monogamy)
ஒருதுணை மணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதைக் குறிப்பதுடன் எந்தவொரு நேரத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டிருக்க முடியும் என்பதையும் குறிக்கும்.

2)பலதுணை மணம் (polygamy)
ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம்.

3)குழு மணம் (group marriage)
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அதுபோல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கணவனாகவும் ஆகிறார்கள்.


'யாழ்'னி
குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம், போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும்.அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."கணவன் - மனைவி தொடர்பு, பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையைலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.
குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,
1. மணவழிக் குடும்பம் (Conjugal Family)
2. தனிக் குடும்பம் (Nuclear family)
3. விரிந்த குடும்பம் (Extended Family) என வகைப்படுத்தலாம்.

1)ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும்.

2)கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.
3)கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.

யாழ்'னி